ஜித்தா ஹரமைன் ரயில் நிலையத்தில் தீ விபத்து!

செப்டம்பர் 29, 2019 661

ஜித்தா (29 செப் 2019): ஜித்தா ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை நன்பகல் 12;35 க்கு இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

மக்கா மற்றும் மதீனாவை இணைக்கும் ஹரமைன் அதிவேக ரெயில் போக்குவரத்து 450 கி.மீ தூரம் கொண்டது.

 

Source: Arab News

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...