தலையே கிரீடம் - கவிதை நூல் வெளியீட்டு விழா!

செப்டம்பர் 30, 2019 349

ஜித்தா (29 செப் 2019): கவிஞர் அராதாவின் 'தலையே கிரீடம்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஜித்தாவில் நடைபெற்றது.

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் ஆற்றல் மிகு செயலாளர் அராதா என்கின்ற சத்யா சிவாஜி அவர்கள் பல்லாண்டுகளாக எழுதி சேமித்த ஹைக்கூ கவிதைகளை தொகுத்து அச்சிட்ட *தலையே கிரீடம்* எனும் புத்தக வெளியீட்டு விழா ஜெம்ஸின் ஆய்த எழுத்து இலக்கிய களத்தின் உதவியுடன் அஜீஜியா ஸ்டார் உணவகத்தின் கூட்ட அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (27- 09 - 2019) அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சி முழுவதையும் ஜெம்ஸ் நிர்வாகக்குழு பொறுப்பாளர்கள் சத்யா சிவாஜியும், தீபா சத்யாவும் துணைத்தலைவி பாலைவன லாந்தர் அவர்களின் வழிகாட்டலோடு ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் ஜெம்ஸ் தலைவர் தஞ்சை ஜாஹிர் ஹூஸைன் வரவேற்க, ரியாதிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் புத்தகத்தை வெளியிட... அதனை ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சேர்ந்த பேரரசு, ஜெய்சங்கர், செந்தமிழ் நலமன்ற ராம் ஐயர் மற்றும் ஜெம்ஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

நூல் வெளியீட்டையும், ஆசிரியர் சத்யாவையும் பாலைவன லாந்தர் அறிமுகம் செய்ய, நூலைப் பற்றிய மதிப்புரைகளை ஆசிரியர் குரு, திருமதி பூரணி விமல் மற்றும் தாயிஃப் நகரத்தின் பிரமுகர் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் கவிஞர் அஹமது பாஷா உரை நிகழ்த்தினர்.

சிறப்பு விருந்தினர் உரையை அபுல் கலாம் ஆசாத் அவர்கள் ஹைக்கூ கவிதைகளைப் பற்றியும் அது தோன்றிய இடம், மெல்ல வளர்ந்தவிதம் இன்றைய நிலவரத்தில் அதன் தாக்கம் என ஒவ்வொன்றாய் ஆதாரத்துடனும், உருது மொழி கவிதைகளுடனும் விளக்கிக் கூற...

வாழ்த்துரைகளை ஜெய்சங்கர், பேரரசு, ஸ்ரீராம் ஐயர், மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி, ஆசிரியை மைதிலி முரளி, நடன ஆசிரியை ரஜினி ஸ்ரீ ஹரி, மதினா முகமது இஸ்மாயில், ரோஜாக்கூட்ட அன்பர்கள் ராஜசேகர் மற்றும் செந்தில் ராஜா ஆகியோர் வழங்கினர்.

ஏற்புரையை நூலாசிரியர் அராதா என்கிற சத்யா சிவாஜி தன் கவிதை எழுதிய அனுபவங்களையும் புனைபெயர் வந்த காரணத்தையும் எடுத்துக்கூற நிறைவாக தீபா சத்யா நன்றியுரை கூறினார்.

சிறுவர் சிறுமியருக்கான நிகழ்ச்சிகளை ரம்யா பேரரசு, பர்வீன் ரஃபிக், ஃபஹிமா உமர், சரணியாஅழகு, சித்ரா ராஜசேகர், விசாலினி ஏகப்பன் உள்ளிட்டோர் வடிவமைத்த போட்டிகளை செயல்படுத்தி பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியை அழகிய தமிழில் திறம்பட தொகுத்து அனைவரின் பாரட்டையும் பெற்றார் மருத்துவர் சாவித்திரி மணி.

நிகழ்வில் மூர்த்தி, முரளி, பிரேம்நாத், சேனாபதி, விமல், சுரேஷ், உப்பிலி, ரஃபிக் உசேன், முனவர் ஷெரீஃப், ஜாஃபர், முகமது உமர், ஜாஃபர், லோகநாதன், சுசீலா லோகநாதன், ரமேஷ், விஜி சரன், ஏகப்பன் உள்ளிட்ட ஏராளமானோரும் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பயணத்தில் ஓர் இனிய அனுபவத்தைக் கொடுத்தது.

இது போன்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் வளைகுடா நாடுகளில் நடந்திருந்தாலும், ஹைக்கூ கவிதைப் புத்தக வெளியீடு என்பது வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...