சவூதி ஜித்தாவில் மின்சாரம் தாக்கி இந்திய இளைஞர் மரணம்!

அக்டோபர் 03, 2019 596

ஜித்தா (03 அக் 20109): சவூதி அரேபியா ஜித்தாவில் இந்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரம் காளிக்காவு பகுதியை சேர்ந்தவர் இஷாகலி(வயது-30). இவர் ஜித்தா ஹம்தானியாவில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் பணியாற்றிய இடத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இணைப்புகள் வழங்க நிறுவப்பட்ட பெட்டியில் இருந்து வெளியே நீட்டியபடி நின்ற ஒரு வயர் அவர் மீது எதிர்பாராமல் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்கு ஆமீனா என்ற மனைவியும், அமீன்ஷான் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...