ஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமுக மமகவினர் முக்கிய கோரிக்கை!

அக்டோபர் 14, 2019 349

ஜித்தா (14 அக் 2019): ஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமுமுக மற்றும் மமகவினர் எம்பியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

ஜித்தாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் Dr.நவாஸ் கனி அவர்களின் மூன்று நிகழ்சிகளிலும் பங்கெடுத்த தமுமுக / மமக நிர்வாகிகள்*

சவுதி அரேபியா ஜித்தா மாநகரத்தில் நடைபெற்ற KMCC- காயிதே மில்லத் பேரவை, வசந்தமே வருக, Ramnad Development Group ஆல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுர பாராளுமன்ற உறுப்பினர் Dr.நவாஸ் கனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வுகளில் சவுதி மேற்கு மண்டல பொறுப்பாளர்கள் அப்துல் மஜீத் , கீழை இர்ஃபான் , ஜித்தா மாநகரத் தலைவர் இலியாஸ் , செயலாளர் ராஜா முஹம்மது, துணைச்செயலாளர்கள் அப்துல் ஹலீம் மற்றும் சமீர் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தாக் ரஹ்மான் , அஷ்ரப் அலி, செல்வகனி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

தமுமுக பொதுச் செயலாளர் ஆரூர் புதியவன் ஜெ. ஹாஜாகனி அவர்கள் எழுதிய *சொர்களால் ஒரு சுதந்திரப் போர்* என்கின்ற புத்தகம் சவுதி மேற்கு மண்டலம் ஜித்தா மாநகரம் சார்பாக Dr. நவாஸ் கனி MP* அவர்களுக்கு வழங்கப் பட்டது.

ஆயுத எழுத்து இலக்கிய குழுவினர் நடத்திய வசந்தமே வருக நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக கீழை இர்பான் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் மற்றும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை Dr. நவாஸ் கனி MP அவர்களிடம் வலியுறுத்தினார்.

KMCC காயிதே மில்லத் பேரவை நடத்திய நிகழ்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக
Dr. நவாஸ் கனி MP அவர்களுக்கு பொன்னாடை போர்தப்பட்டது.

ஆரியாஸ் உணவகத்தில் நடத்தப்பட்ட நிகழ்சியில் தமுமுக சவுதி மேற்கு மண்டல பொறுப்பாளர் அப்துல் மஜீத், *வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரே கூட்டணியில் போட்டியிட வேண்டும்*,

தமிழகத்தை போன்று இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் ,முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காகவும் நாடாளுமன்றதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை Dr.நவாஸ் கனி அவர்களிடம் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...