டூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை!

அக்டோபர் 17, 2019 390

ரியாத் (17 அக் 2019): சவூதி புதிய டூரிஸ்ட் விசா முறையில் உம்ரா மேற்கொள்வதற்கும் அனுமதி உண்டு என்று சவூதி புதிய விசா கொள்கை முறையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சவூதி அரேபியா புதிய விசா கொள்கைப்படி டூரிஸ் விசா முறையில் சவூதியில் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விசா முறையில் சவூதி வரும் முஸ்லிம்கள் உம்ரா மேற்கொள்வதற்கும் தடை இல்லை. மேலும் மதீனா செல்வதற்கும் தடை இல்லை. அதேவேளை ஹஜ் காலங்களில் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு அனுமதி இல்லை.

அவரவர் நாட்டில் உள்ள சவூதி தூதரகம் மூலம் டூரிஸ் விசா பெற்றுக் கொள்ளலாம். மேலும் 49 நாடுகளில் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். விசா கட்டணம் 300 ரியால் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...