சிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு!

அக்டோபர் 17, 2019 283

அங்காரா (17 அக் 2019): சிரியாவின் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என்று துருக்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிரியாவில் துருக்கி நடத்திவரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்நாட்டுடன் பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மைக் போம்பியோ ஆகியோர் அங்காரா விரைந்துள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது.

தற்போது அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதையடுத்து குர்திஷ் படையினரை குறிவைத்து சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் நிறுத்த மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையையும் துருக்கி நிராகரித்துள்ளது. இந்நிலையில், துருக்கியுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் பென்சி மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் போம்பியோ ஆகியோர் அந்நாட்டு தலைநகர் அங்காரா விரைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...