சவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரணம்!

அக்டோபர் 17, 2019 1599

மதீனா (17 அக் 2019): சவூதி அரேபியா மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை காலை ஏற்பட்ட இந்த விபத்து, பேருந்து பெரிய வாகனம் ஒன்றில் மோதியதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்கள் அரபிய, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹிஜாரா என்ற சாலையில் மதீனாவிலிருந்து 170 கீ.மீ தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...