குவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்!

அக்டோபர் 20, 2019 421

குவைத் (20 அக் 2019): குவைத்தில் சமீபத்தில் வேலைக்கு சென்ற தமிழக இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், பஷீர் அப்பாஸ் தெருவில் வசித்து வரும் ஜாபர் அலி என்பவரின் மகன் சதாம் உசேன்(வயது-23) இவர் சில தினங்களுக்கு முன்பு குவைத்திற்கு வேலைக்காக சென்றார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சதாம் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை(19/10/2019) உயிரிழந்தார்.

குவைத் வந்த சில தினங்களிலேயே தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குவைத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...