குவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி!

நவம்பர் 05, 2019 335

குவைத் (05 நவ 2019): குவைத்தில் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

குவைத் Shuwaikh Shuwaikh தொழில் முனைய பகுதியில் பகுதியில் திங்கள் கிழமை காலையில் 7 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர் திருவாரூரை சேர்ந்த பழனிசாமி சங்கர்(வயது-48) என்பதாகும். இவர் சமீபத்தில்தான் குவைத் வந்தர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒரு எகிப்து மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவரும் உயிரிழந்துள்ளனர். இதை தவிர இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது விரைந்து வந்த தீயணைப்பு துறை ம ற்றும் பாதுகாப்பு துறை வீரர்கள் கடினமான போராடி தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...