BREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்!

நவம்பர் 08, 2019 283

இரான் (08 நவ 2019): இரானில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரம் 05:47 க்கு இரான் ஹஷ்த்ரட் என்ற பகுதிக்கு 35 மைல் தூரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

தற்போதைய தகவல்படி இந்த நில நடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் துரிதப் பட்டுள்ளன.

இரானில் கடந்த 2017 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 பேர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...