ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை, இடி, மின்னல் காரணமாக புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் அவரவர்களின் சூழலுக்கு ஏற்ப விடுமுறை அறிவித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை மேலும் இரு தினங்கள் நீடிக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் தெரிவித்துள்ளது.