சவூதி ஜித்தாவில் 5 வது சர்வதேச புத்தக கண்காட்சி!

நவம்பர் 25, 2019 314

ஜித்தா (25 நவ 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஐந்தாவது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஜித்தா அபுஹூர் பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், 40 நாடுகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பதிப்புகள் இடம்பெறுகின்றன. மேலும் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.

மேலும் புத்தக கண்காட்சியை ஒட்டி, எழுத்தாளர்களின் கருத்தரங்குகள், பல்வேறு ஓவியங்கள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறுகின்றன. 

சுமார் 200 எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...