மூன்று இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய சட்ட மசோதா நேபாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

709

புதுடெல்லி (18 ஜூன் 2020): மூன்று இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

இதற்கு நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை சனிக்கிழமையன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைபதிவு செய்தது.

இந்நிலையில் இந்த மசோதா அனைத்து 57 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததோடு இன்று அந்த மசோத நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள முக்கியமான சாலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த சாலை தனது பிரதேசத்தை கடந்து சென்றதாகக் கூறி நேபாளம் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் நேபாள அரசு மூன்று இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.