பெண்கள் பல கணவருடன் வாழலாம் – சர்ச்சையை கிளம்பியுள்ள புதிய சட்டம்!

1478

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது

இந்த சட்டம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஏனென்றால் தென் ஆப்ரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதேபோன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை எனவேதான் இந்த மாற்றங்களை அதிபர் சிரில் ராம்ஃபோசாவின் அமைச்சரவை முன்மொழிந்துள்ளது.

இந்த திருமண சட்டத்தில், குழந்தைகள் திருமணங்களை தடுக்கும் வகையில் திருமணத்திற்கான குறிப்பிட்ட வயது, பல்வேறு பாலினத்தவர்கள், மதங்களை சார்ந்தவர்கள், கலாசார நம்பிக்கை கொண்டவர்களின் திருமணங்களை சட்ட ரீதியாக்குவது போன்ற மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.