கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

Share this News:

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன.

இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா வாங்கியதால், ஹைட்ராக்சி குளோரோகுயின் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல், ‘கொரோனாவிடம் இருந்து என்னை தற்காத்து கொள்ள தினமும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருகிறேன்’ என பகிரங்கமாக பேட்டி அளித்தார். இது அமெரிக்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப்பின் எதிரியான அந்நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி ஒரு நேர்காணலில், ‘‘டாக்டர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். அமெரிக்கர்களும் அதைத்தான் செய்வார்கள். ஹைட்ராக்சி குளோரோகுயினை எடுத்துக் கொள்ள மாட்டேன். நிரூபிக்கப்படாத அந்த மாத்திரை சாப்பிடுவதால் டிரம்ப் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்,’’ என்றார். துணை அதிபர் மைக் பென்சும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதில்லை என கூறியிருக்கிறார். பல எதிர்க்கட்சி தலைவர்களும் டிரம்ப்பை விளாசுகின்றனர்.

மறுபுறம் மருந்து பற்றிய எதிர்மறை தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த மருந்தை சாப்பிடும் முதியவர்கள் இறக்கிறார்கள் என்றும், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் தான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தகவல்கள் பரபரப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப், ‘‘கொரோனா வைரசை எதிர்த்து போராடும் தரமான மருந்து இது’’ என்றார். கொரோனா ரணகளத்திலும் இப்படியொரு அக்கப்போர் அமெரிக்காவில் நடக்கிறது.

இதுமட்டுமல்லாமல் உலகளவில் கொரோனாவுக்கு மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 335 பேர் இறந்துள்ளனர். இதில், அமெரிக்காவில் மட்டுமே 91 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும், 15 லட்சம் பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தொற்று அதிகமுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறதே என கேள்வி கேட்கிறீர்கள். மற்ற நாடுகளை விட நாம் அதிகம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தியுள்ளோம். அதிக தொற்று இருப்பது மோசமானதல்ல. இது நல்ல விஷயமே. இதை கவுரவத்தின் அடையாளமாக கருதுகிறேன்,’’ என்றார்.

இதிலெல்லாம் ஒரு பெருமையா? என்று ட்ரம்பை மேலும் பலர் விளாசுகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து ‘இன்னும் ஆய்வுகள் நடத்த வேண்டும். என கூறியுள்ளது. அ


Share this News: