கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

717

மணிலா (23 ஜூன் 2021): “பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்!” என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அந்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “மக்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். நம் நாட்டில் கொரோனா பரவலால் நெருக்கடி நிலவுகிறது. நாம் ஏற்கனவே கொரோனாவால் கஷ்டப்படுகிறோம். மேலும் நாட்டை கஷ்டப்படுத்தாதீர்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள்”

“அதுமட்டுமல்ல நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியா அல்லது ஏதாவது நாட்டுக்கு செல்லுங்கள். நீங்கள் இங்கு இருக்கும் வரை, நீங்கள் வைரஸைக் கொண்டு இருப்பவராகிறீர்கள். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.

இவரின் பொறுப்பற்ற பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது.