உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமா?

Share this News:

மாஸ்கோ(28 பிப் 2022): அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 1,684 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை நடந்த சண்டையில், சுமார் 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. மேலும், 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு 5.4 மில்லியன் டாலர் நிவாரண உதவியை அமெரிக்கா விடுவித்துள்ளது. பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிய உக்ரைன் மக்களின் எண்ணிக்கை 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் நாட்டிலா? அல்லது வேறு பகுதியில் நடக்குமா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் விவகாரத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் சிறப்பு அவசர அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நேற்றிரவு நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 1 (ரஷ்யா) வாக்குகளும் கிடைத்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன

இது இப்படியிருக்க அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்யாவுக்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Share this News:

Leave a Reply