கொழும்பு(25 பிப். 2016): இந்த நவீன காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் சமூகத்தில் எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் நோர்வூட் மேற்பிரிவு தோட்ட மக்கள்.

இலங்கை:  (23.02.2016) அன்று மாலை நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த சென் ஜோன்ஸ் கந்தப்பளை பகுதியை சேர்ந்த மாணவன் எம்.சுகிர்தன் (வயது 9) 24.02.2016 அன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையகத்தில் போதுமான அளவு பட்டதாரிகள் வேலையற்றிருக்கின்றனர். அவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே பொருத்தமானதாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 07, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியில் சர்வதேச தாய்மொழித்தின விழா 23.02.2016 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரியின் அதிபர் எம்.எம். ரத்நாயக்க தலைமையில் நடைபெறுகிறது.

உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

தோட்ட கிராமபுர வீதிகள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கபுர எனும் பகுதியில் உள்ள பாதையிலிருந்து 20 அடி பள்ளத்தில் தவிறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் ஸ்டிரதன் பகுதியில் 20.02.2016 அன்று மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகதுலுவ பகுதியில் 19.02.2016 அன்று மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு ஒன்று 19.02.2016 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...