கொழும்பு (09-03-16) :திருகோணமலையில் செயல்படும் அந்நூரியா பள்ளியில் ஆசிரியர் குறைவால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2016ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டமும், ஆயர்வேத வைத்திய முகாமும், பாடசாலை மாணவர்களுக்கு பற்சிகிச்சை முகாம் ஒன்றும் நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் 08.03.2016 அன்று அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

கொழும்பு (07-03-16): சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியில் தமிழ் கல்வி நிலை குறித்தும் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் பேசக்கூடிய தருணம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கொழும்பு (05-03-16): மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (04-03-16): தோட்டத்தொழிலாளர்களது நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையீட வேண்டும் என ஜே.வி.பியின் மத்தியசெயற்குழு உறுப்பினரும் முன்னால் எம்பியுமான கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.

கொழும்பு (04-03-16): கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி அட்டனில் 04.03.2016 அன்று மதியம் போராட்டம் நடத்தியது.

கொழும்பு (04-03-16): பண்டாரவளை - பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு (04-03-16): அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வலய மட்ட மேற்பார்வைகள் உரிய வகையில் இடம் பெறாதது குறித்து மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...