கொழும்பு (04-03-16): நானுஓயா எடின்புரோ தோட்ட தாஜ்மஹால் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கமைய இம்மாதம் 5ம், 6ம் திகதிகளில் நானுஓயா தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு (04-03-16): லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாஎல்லை கீழ் பிரிவில் 150 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 03.03.2016 அன்று மாலை 04 மணிக்கு தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு (04-03-16): கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்ட காணியின் ஊடாக வெளிநபர் ஒருவர் பாதை ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைளுக்குத் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் கழுத்தில் (9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் 02.03.2016 அன்று மாலை கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை (02-03-16): இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக உள்ளார் என்று பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு (02-03-16): இலங்கையில் 40% ஆண்களும், 2% பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இலங்கை (02-03-16): இலங்கை அனைத்து நாடுகளுடனும் நல் உறவை பேணி வருகிறது என்று புது டில்லியில் நடந்த கருத்தரங்கில் சந்திரிகா குமாரதுங்க கூறியிருக்கிறார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி நோர்வூட் – ரொக்வூட் பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...