கொழும்பு(14 அக். 2015): காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரர் கொழும்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை: இலங்கையின் முன்னாள் கைத்தொழில் அமைச்சர் கருப்பையா வேலாயுதம் சென்னையில் மரணமடைந்தார்.

இலங்கை : கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.

சென்னை(03/10/2015) : "போர் குற்ற விசாரணையில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் வெளுத்துவிட்டது. உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாநிலங்களை தனித் தமிழீழமாக அறிவிக்க வேண்டும். அது மட்டுமே இனி ஒரே தீர்வு" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு (29/09/2015): சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணாக்கரில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

ஜெனீவா: இலங்கையில் 2002 - 2011 கால கட்டத்தில் பல திகிலூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார்.

இலங்கை : "தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்களில் இருந்து மீளவே மஹிந்த ராஜபக்சே மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்" என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

இலங்கை : இலங்கையின் புதிய பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வரவுள்ளார். பயணத்துக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் பணியில். இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!