கொழும்பு(22 அக்.2015); இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் உண்மையானது என்று நீதிபதி மெக்ஸ்வெல் பணரகம தலைமையிலான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை : சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழிவுபடுத்தும் விதமாக பதிவுகள் செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்­ட­மொன்றை இலங்கை அரசு நிறைவேற்ற உள்ளதாக நீதித்துறை அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்சே தெரி­விடுத்துள்ளார்.

இலங்கை: இலங்கை புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் தலைவி தமிழினி இன்று மரணம் அடைந்தார்.

கொழும்பு(17/10/2015): ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் 1-ம் தேதியிலிருந்து தடை விதிக்க, இரயில்வே திணைக்களம் தீர்மானம் அறிவித்துள்ளது.

கொழும்பு: இலங்கை கொட்டதெனியாவில் சிறுமியை வல்லுறவு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக சகோதரர்கள் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

கொழும்பு(14 அக். 2015): காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரர் கொழும்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை: இலங்கையின் முன்னாள் கைத்தொழில் அமைச்சர் கருப்பையா வேலாயுதம் சென்னையில் மரணமடைந்தார்.

இலங்கை : கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.

சென்னை(03/10/2015) : "போர் குற்ற விசாரணையில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் வெளுத்துவிட்டது. உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாநிலங்களை தனித் தமிழீழமாக அறிவிக்க வேண்டும். அது மட்டுமே இனி ஒரே தீர்வு" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...