இலங்கையில் மசூதி மீது தாக்குதல் - கடைகள் சூறை!

மார்ச் 01, 2018 1269

அம்பாறை(01 மார்ச் 2018): இலங்கை அம்பாறை பகுதியில் ஜும்மா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

இலங்கை அம்பாரா பகுதியில் ஜும்மா மசூதி மீது தாக்குதலும் முஸ்லிம்களின் கடைகளும் சூறையாடப்பட்டுள்ளன. புத்த மதத்தை சேர்ந்த சில வன்முறையாளர்கள் இதில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனை அடுத்து அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை இனக்கலவரம் தொடர்பாக கடுமையான முறையில் அதிருப்தியை வௌயிட்டிருந்தார்.

அதேபோல அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடர்பாக நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...