இலங்கை கலவரம் - முஸ்லிம் கடைகள் மசூதிகள் மீது தாக்குதல்!

மார்ச் 06, 2018 1614

கண்டி (06 மார்ச் 2018): இலங்கையில் கண்டியில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சிங்கள இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உட்பட்டு உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து அங்கு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் மசூதிகளும் தாக்கப்பட்டுள்ளன.

கண்டியில் தொடங்கிய கலவரம் தெல்தொனிய, திகன பகுதிகளிலும் பரவியதாக கூறப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீசப்பட்டுள்ளது. எனினும் நிலமை கட்டுக்குள் வராததால் சிறப்பு போலீஸ் படை அழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தீ வைப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள பேரினவாதிகள் இந்த தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கண்டி கலவரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...