இலங்கையில் நாடு முழுவதும் எமர்ஜன்சி!

மார்ச் 06, 2018 1564

கொழும்பு (06 மார்ச் 2018): இலங்கை கண்டியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இலங்கை முழுவதும் 10 நாட்களுக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் முஸ்லிம்கள் கடைகள் வீடுகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த அரசு திணறி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் கண்டி பகுதியில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அதிபர் சிறிசேனா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு எமர்ஜென்சியை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் திசநாயகா தெரிவித்தார்.

மேலும் ராணுவம், போலீசார் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் மூலம் சட்டவிரோத பிரச்சாரம் நடப்பதை கட்டுப்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...