இலங்கை கண்டியில் தொடரும் வன்முறை!

March 07, 2018

கண்டி (07 மார்ச் 2018): இலங்கை கண்டியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கண்டியில் கடந்த இரண்டு தினங்களாக அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில், வன்முறை தொடர்வதாலும், மேலும் வன்முறை இலங்கை முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாலும் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அரசு எமெர்ஜன்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் கண்டி மெனிகின்ன பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சுமார் 400 பேர் கொண்ட கும்பல் மசூதி மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இதற்கிடையே அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்தார். அங்கு வன்முறையை அடக்க போதிய அளவு போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது. அங்குள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!