இலங்கையில் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் சமூக வலை தளங்களுக்கு தடை!

March 07, 2018

கொழும்பு (07 மார்ச் 2018): இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை அடுத்து அங்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதற்றத்தை குறைக்கவும், அவசியமில்லாத பிரச்சாரங்களை தடுக்கவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வைபர் ஆகிய வலையமைப்புக்களை இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாடெங்கிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் பதற்றநிலை தொடர்வதை அடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது குடிமக்களுக்கு இலங்கைப் பயணம் குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கைக்கு பயணிப்பவர்கள் அங்கு, ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அவை அறிவுறுத்தியுள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!