இலங்கை கண்டியில் முஸ்லிம்கள் மீது சிங்கள பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடைகள் வீடுகள் மற்றும் மசூதிகள் என தாக்குதல் நடத்தப் படுகின்றன.
இந்நிலையில் நேற்று கண்டியில் பள்ளி வாசல் மீது கையெறி குண்டு வீச முயன்ற இருவர் அதே குண்டு வெடித்து பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருவர் மட்டுமே பலியானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சிங்கள இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு பலியானதை அடுத்து இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.