இலங்கை கோவிலில் மர்ம நபர்கள் தீ வைப்பு!

March 09, 2018

கல்முனை (09 மார்ச் 2018) இலங்கை கல்முனை பகுதியில் சித்தி விநாயகர் கோவில் தோரணம் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள கண்டி பகுதியில் சிங்கள பயங்கர வாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்முனை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் தோரணம் ஒன்றிற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடன் போலீசுக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சூழலில் இந்த தீ வைப்பு சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!