இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பின்னணி - திடுக்கிடும் தகவல்கள்!

March 10, 2018

கண்டி (10 மார்ச் 2018): இலங்கை கண்டியில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இன வெறியர்களின் தாக்குதல் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இலங்கையில் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப் பட்டு வருகின்றனர். இதற்கு சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப் பட்டதை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதுவல்ல முக்கிய காரணம். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஏற்கனவே திட்டமிடப் பட்ட ஒன்று என்று தெரிய வந்துள்ளது.

பொதுவாக தமிழர்களும், முஸ்லிம்களும் முன்னேற்றம் அடைவதை சிங்களவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக தற்போது முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ளாத சிங்கள இனவாதிகள் பல காலமாக முஸ்லிம்களை குறி வைத்து வருகின்றனர். ஆனால் சந்தர்ப்பம் அமையாமல் இருந்தது. அதற்கு ஒரு வாய்ப்பாக சிங்கள இளைஞனின் மரணம் அமைந்தது. அதனைச் சரியாக பயன் படுத்திக் கொண்ட சிங்களவர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடினர். கண்ணில் பட்ட முஸ்லிம்களை தாக்கினர். மசூதிகள் சின்னா பின்னமாக்கப் பட்டன.

இது முதல் முறையல்ல. வரலாற்றில் அழிக்கப்படாத வன்முறையாக 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கூறப்படுகிறது. அதனை அடுத்து 1958 ஆம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் ஆகியவையாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் என்று மட்டுமல்ல தமிழ் பேசும் அனைவரையும் சிங்களவர்கள்  குறிவைத்து தாக்குவதுதான் கொள்கை. 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரில் தமிழர்கள் சின்னா பின்னமாக்கப் பட்டனர். இப்போது முஸ்லிம்கள் மீது குறி வைக்கப்படுகிறது.  இன்னும் தொடரும் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வராவிடில் இன்னொரு அழிவை தமிழர்கள் சந்திக்க நேரிடும் என்று இலங்கை தமிழ் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!