இலங்கையில் ஃபேஸ்புக் தடை நீக்கம்!

மார்ச் 15, 2018 657

கொழும்பு (15 மார்ச் 2018): இலங்கையில் சமூக வலைதள தடைகள் நேற்று முதல் நீங்கிய நிலையில் ஃபேஸ்புக் இன்று முதல் இயங்க தொடங்கியது.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை அடுத்து மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஃபேஸ்புக், வைபர், இன்ஸ்டாகிராம் போன்ற. சமூக வலைதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் வாட்சப் போன்றவை நேற்றே செயற்படத்தொடங்கிவிட்ட நிலையில் ஃபேஸ்புக் மாத்திரம் இன்றுவரை தடுக்கப்பட்டிருந்தது. அதற்கான தடை இன்று நீங்கியது.

கண்டி கலவரத்தில் முஸ்லிம்கள் சொத்துக்கள் சேதமடைந்தன. பல மசூதிகள் அடித்து நொறுக்கப் பட்டன. மேலும் மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...