போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க திட்டம்!

July 12, 2018

கொழும்பு (12 ஜூலை 2018): போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த முடிவை அதிபர் மைத்ரி பால சிரிசேனா திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக ஏற்கனவே போதைப் பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்தும் இந்த செயலை தொடரும் 19 பேருக்கு மரண தண்டனை வழங்கவுள்ளதாகவும் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!