அகதிகள் முகாமில் உள்ள இலங்கை முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற கோரிக்கை!

ஜூலை 26, 2018 691

கொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டறிந்து அந்த கோரிக்கைகளை உடனடியாக இந்திய துணை தூதர் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் எஸ். பாலசந்திரனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் சந்தித்து பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசினார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் பார்வையிட்ட பகுதிகளில் குறித்தும் மேலும் பல்வேறு தமிழர்கள் தலைவரை சந்தித்து அவர்களது குறித்த கோரிக்கை குறித்து பேசினார். பின்னர் பல்வேறு பிரச்சனைகளை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து போர் காலங்களில் வெளியேறி பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாமில் உள்ளவர்களை உடனடியாக அவர்களது சொந்த இடத்துக்கு குடியமர்த்தி அவர்களது தேவையான அனைத்து வசதிகளையும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு கண்டிப்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், வெளியேறிய போனவர்கள் எப்போது வேண்டுமானலும் வரலாம் என்றும் தெரிவித்தார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எமது திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீதிடம் கூறியதாவது: நான் இந்திய துணை தூதரிடம் பல்வேறு பிரச்சினை குறித்து பேசினேன். அதே போல இலங்கை உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு மறுவாழ்வு பணிக்காக பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் மேலும் மறுவாழ்வு பணிக்காக ஓதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தி வருவதுதாக கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாண பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருப்பதை தெரிவித்தேன். அவர்களை எந்தந்த முகாமில் இருக்கிறார்கள். கண்டறிந்து அவர்களை உடனடியாக அவர்களை சொந்த இடத்திற்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். இந்திய அரசு மறுவாழ்வு பணிக்காக இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் புறக்கணிப்பதாகவும் எல்லோருக்கும் வீடுகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு துணை தூதர் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும்.

அதேபோன்று யாழ்ப்பாணத்தில் கல்வி நிறுவனங்கள் தொடங்க தயாரவது முன்வந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயராக இருப்பதாகவும் கூறினார். கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் யராவது முன் வந்தால் உதவிகள் செய்ய தயராக இருப்பதாகவும் கூறினார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பான விஷயங்களை குறித்து பேசினேன். அதற்கு மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. அந்த துறைமுகங்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் எல்லை தாண்டி பிரச்சினைகள் வராது இது போன்ற துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதன் மூலம் மீனவர்கள் தாக்கப்படுவது என்ற பேச்சு வராது என்று கூறினார்.

யாழ்ப்பாண பகுதியில் அதிக அளவில் முஸ்லிம்கள் குடியேற்றாமல் பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாமில் இருந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் எந்த அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் கண்டறிந்து அவர்களை சொந்த ஊரில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் மூலம் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யுமாறும் கேட்டு கொண்டேன். அதற்கு துணை தூதர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களுக்கு மறுவாழ்வுக்காக தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் ரோஷன் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிகான், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...