இலங்கையில் யார் பிரதமர்? தொடரும் பரபரப்பு!

அக்டோபர் 28, 2018 409

கொழும்பு (29 அக் 2018): இலங்கையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றாலும் ரணில் விகரமசிங்கே நானே பிரதமர் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு காணப் படுகிறது.

இலங்கையின் அலரி மாளிகை வெள்ளிக்கிழமை மாலை முதல் பரபரப்பாகவே காணப்படுகிறது. வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் குழுமி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், நானே பிரதமர் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். வெள்ளி இரவு முதல் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களுடன் அலரி மாளிகையில் தங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவதில் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ தரப்பு குறியாக இருக்கிறது.

அலரி மாளிகையில் தொடர் சந்திப்புக்கள் நடந்து வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் புதிய பிரதமாக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கக் கூடும் என்று நம்பப்படுகின்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அழைத்துப் பேசப்படுகின்றனர்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மகிந்த தரப்பிற்கு சென்றுள்ள நிலையில், இந்தச் சந்திப்புக்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்திலும் மேலதிக பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...