நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்?

நவம்பர் 07, 2018 1060

கொழும்பு (07 நவ 2018): இலங்கை நாடாளு மன்றத்தை நள்ளிரவில் கலைக்க அதிபர் சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியலில் உச்சபட்ச பரபரப்பாக இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் என்பதால் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரம் இல்லையென்றாலும் நாடாளுமன்றத்தை கலைக்க சிறிசேனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...