இலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

நவம்பர் 13, 2018 545

கொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவை நீக்கம் செய்து ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் ரணில் அதனை ஏற்கவில்லை. இதனை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அதிபர் சிறிசேனா பிறப்பித்த இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு உருவாகியிருந்தது.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதிபரின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 11 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபரின் உத்தரவுக்கு 19-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தனர். மேலும் பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...