போலீஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து படுகொலை - தொடரும் அதிர்ச்சி!

டிசம்பர் 03, 2018 938

கொழும்பு (03 டிச 2018): இலங்கை மட்டக்களப்பு வவுணதீவு சோதனை சாவடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போலீஸ் அதிகாரி சர்ஜண்ட் நிரோஷன் இந்திக்க பிரசன்ன மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு போலீஸ் அதிகாரிகள் இதே இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் நிரோஷன் இந்திக்க பிரசன்ன படுகொலை செய்யப் பட்ட விவகாரம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் கொலை செய்யப் பட்ட காவல்துறை அதிகாரி இல்லத்திற்கு அதிபர் சிறிசேனா வருகை புரிந்தார். அங்கு நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...