இலங்கை அதிபரின் உத்தரவு செல்லாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டிசம்பர் 13, 2018 399

கொழும்பு (13 டிச 2018): இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டது செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சார்பில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைவ விசாரித்த நீதிமன்றம் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...