கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினர் சீல் வைப்பு!

பிப்ரவரி 06, 2019 271

கொழும்பு (06 பிப் 2019): ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

திம்புள்ள பத்தனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு 05.02.2019 அன்று மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் 05.02.2019 அன்றைய தினம் சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்.

சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்கள் பயிலும் ஸ்ரீ கல்வியியல் கல்லூரியில் நாளாந்தம் இந்த சமையல் அறையிலிருந்தே இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதனாலும் சமையல் மேற்கொள்வதற்கு பொருத்தமாக இடமாக இதனை வைத்திருக்காததனாலும் பயிலுநர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும் இது குறித்து முறைபாடு கிடைத்தற்கமைவே 05.02.2019 அன்று இந்த சமையலறையினை சோதனை செய்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கல்லூரியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 100ற்கும் மேற்பட்ட பயிலுநர் ஆசிரியர்கள் உணவு விசமானதில் நோய்வாய்ப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சமையலில் ஈடுபவர்களுக்கு இதனை மூன்று மாதங்களுக்கு சுத்தப்படுத்தப்பட வேண்டுமென எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சமையலறை திறக்கும் வரை வெளியிலிருந்து பயிலுநர்களுக்கு சாப்பாடு பெற்றுக்கொடுக்குமாறு உரியவர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளன.

- Krishanthan Gk

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...