தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு!

பிப்ரவரி 12, 2019 320

கொழும்பு (12 பிப் 2019): தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் தற்கொலை தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சென்ற மாதம் 28.01.2019 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதி ஒருவர் தொடர்பில் அட்டன் நீதி மன்றத்தில் 12.02.2019 அன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட முதலாவது வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு எடுத்து கொண்ட அட்டன் நீதிமன்ற நீதவான், வழக்கு தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க விசாரணைகளை முறையாக மேற்கொண்டு சரியான சாட்சி பதிவுகளுடன் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முன்னிலைப்படுத்த வேண்டும் என அட்டன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

-க.கிஷாந்தன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...