இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் கொண்டு வரப்பட்ட உடல்!

ஏப்ரல் 07, 2019 723

கொழும்பு (07 ஏப் 2019): இலங்கையை சேர்ந்த ஒருவரது உடல் இறந்து 25 வருடங்கள் கழித்து இத்தாலியிலிருந்து தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் ஜோர்ஜ் என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட அவர் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

அப்போது ஸ்டீபன் உடலை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி இத்தாலியில் உள்ள இறந்தவர்களின் உடல்களினை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றுடன் 25 ஆண்டுகள் உடலைப் பாதுகாக்க ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின்படி 25 ஆண்டுகள் நிறைவடையாமல் குறித்த உடலினை பொறுப்பேற்றக முடியாத காரணத்தினால், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் தற்பொழுது உறவினர்கள் உடலினை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் கொண்டுவந்துள்ளனர். அவரது உடல் திங்களன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...