BREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு!

ஏப்ரல் 21, 2019 339

கொழும்பு (21 ஏப் 2019): கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித தேவாலயத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனினும் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் முழு தகவல் வெளியாகவில்லை.

ஈஸ்டர் தினமான இன்று இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...