இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி!

ஏப்ரல் 21, 2019 372

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்கள் மீது இன்று காலை முதல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. மொத்தம் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கொழும்புவுக்கு சற்று தொலைவில் இருக்கும் நிகோம்போ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு வந்த சூழல் குண்டுவெடிப்பு நடந்துள்து.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...