BREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வெடிப்பு!

ஏப்ரல் 21, 2019 876

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சற்று முன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இலங்கையில் காலை 08:45 மணிக்கு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சற்று முன் தெஹிவலை மிருகக் காட்சி சாலையிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் இருவர் கொல்லப் பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இலங்கையில் நடத்தப்படும் தொடர் குண்டு வெடிப்பு உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...