இலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்!

ஏப்ரல் 21, 2019 1364

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக இருவரை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு ஷங்ரி - லா விடுதியில் தங்கியிருந்த இருவர் தற்கொலை குண்டு தாகுதல் நடத்தியிருக்கக் கூடும் என்றும், அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களா? அல்லது வெளிநாட்டினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்ந்து இதுவரை 8 முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளன. 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப் பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...