இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது!

ஏப்ரல் 21, 2019 697

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் 7 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இன்று மாலை நிலவரப்படி 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்கிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கைதானவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...