இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந்திப்பு!

ஏப்ரல் 22, 2019 592

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தப் பட்டதால் நாட்டில் மத மோதல்கள் எதுவும் வந்து விடக் கூடாது என்பதில் மதத் தலைவர்கள் கவனமாக உள்ளனர்.

இந்நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இல்லத்தில் பல்வேறு மதத்தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். எம் மறிக்கார், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் முக்கியமாக மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது குறித்து இதில் விவாதிக்கப் பட்டன.

இதற்கிடையே 200 க்கும் அதிகமானோரை பலி கொண்ட இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் 7 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...