இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

ஏப்ரல் 22, 2019 307

கொழும்பு (22 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இதுவரை 292 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையே இத்தாக்குதல் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கைதானவர்கள் குறித்த தகவலை இலங்கை அரசு வெளியிடவில்லை. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...