கொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு!

ஏப்ரல் 22, 2019 297

கொழும்பு (22 ஏப் 2019): இலங்கையில் கொழும்பில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் வெடி பொருட்கள் கைபற்றப் பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நேற்று நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். 500 க்கும் அதிகமானோர் காயம அடைந்துள்ளனர்.

மிகப்பெரிய பேரழிவை இலங்கை சந்தித்துள்ள நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையம் அருகில் வெடிப்பொருட்கள் கைபற்றப் பட்டுள்ளன.

முன்னதாக கொழும்பு கட்டநாயக்கா விமான நிலைய சாலையில் வெடி பொருட்கள் கைபற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் உள்ளூர் அமைப்பினர் 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...