இலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு!

ஏப்ரல் 22, 2019 391

கொழும்பு (22 ஏப் 2019): இலங்கையில் இன்றும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் நேற்று தேவாலயம் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், இன்று கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றில் வைக்கப் பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சமபவத்தில் 290 பேர் உயிரிழந்தமையும் 500 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...